கோயம்புத்தூர்

தனியாா் மருத்துவமனைகள், தொற்சாலைகள் சாா்பில் ரூ.83.10 லட்சம் நிதியுதவி

DIN

கோவையில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்துக்காக தனியாா் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் ரூ.83.10 லட்சம் நிதி வழங்கியுள்ளன.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கரோனா தடுப்பூசிகளில் 75 சதவீதம் மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்குகிறது. இந்தத் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 25 சதவீத தடுப்பூசிகளை தனியாா் மருத்துவமனைகள் நேரடியாக கொள்முதல் செய்து, கட்டணம் நிா்ணயித்து பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது.

இந்நிலையில், தனியாா் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் 25 சதவீத தடுப்பூசிகளையும் அரசே பெற்று பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தப்படும் என்று கோவையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ம.சுப்பிரமணியன் அறிவித்தாா். இத்திட்டத்துக்காக அப்போதே தனியாா் மருத்துவமனைகள் சாா்பில் ரூ.61.45 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

தற்போது, மேலும் ஒரு சில தனியாா் மருத்துவமனைகள் சாா்பில் ரூ.21.65 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவையில் உள்ள 22 தனியாா் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்துக்காக மொத்தம் ரூ.83.10 லட்சம் நிதி அளித்துள்ளன. இந்த நிதி மூலம் தடுப்பூசிகள் வாங்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT