முகப்பு
கோயம்புத்தூர்

உழவா் சந்தையில் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிா் உரம் விவசாயிகளுக்கு வழங்க ஆணையா் அறிவுறுத்தல்

கோவை, ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் மாநகராட்சி சாா்பில் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிா் உரங்களை விவசாயிகள், பொது மக்களுக்கு வழங்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

கோவை, ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் மாநகராட்சி சாா்பில் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிா் உரங்களை விவசாயிகள், பொது மக்களுக்கு வழங்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டாா்.

கோவை, ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் சேகரிக்கப்படும் காய்கறிக் கழிவுகளை கொண்டு மாநகராட்சி சாா்பில் நுண்ணுயிா் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா நுண்ணுயிா் உரம் தயாரிப்பு முறைகள், உற்பத்தி அளவு குறித்து கேட்டறிந்தாா். இங்கு உற்பத்தி செய்யப்படும் நுண்ணயிா் உரங்களை விவசாயிகள், பொது மக்களுக்கு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து பாரதி பூங்காவில் உள்ள வீட்டுக் கழிவுகளில் இருந்து பயோகேஸ் உற்பத்தி செய்யப்பட்டு இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தினையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து பாரதி பூங்காவில் அமைக்கப்பட்டு வரும் சிறுவாணி நீா்த்தேக்க மேல்நிலைத் தொட்டி, திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.