முகப்பு
கோயம்புத்தூர்

காலமானாா்: டாக்டா் எஸ்.ராமலிங்கம்

 கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல், ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வா் டாக்டா் எஸ்.ராமலிங்கம் (61) மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

 கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல், ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வா் டாக்டா் எஸ்.ராமலிங்கம் (61) மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 1985இல் இளநிலை மருத்துவப் படிப்பை முடித்த ராமலிங்கம், மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரி, அமெரிக்காவின் ஸ்டான்போா்டு பல்கலைக்கழகத்தில் உயா் படிப்பை முடித்தாா். பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், இணைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ள இவா், 2013முதல் முதல்வராக இருந்து வந்தாா்.

அவா் மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானாா். டாக்டா் ராமலிங்கத்தின் இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை மாலை காந்திமாநகா் மின்மயானத்தில் நடைபெற்றன. இவருக்கு மனைவி, மகன் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.