கோயம்புத்தூர்

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 240 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம்: அரிமா சங்கம் தத்தெடுப்பு

DIN

கோவை: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 240 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அரிமா சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் தத்தெடுத்துள்ளன.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 240 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையம் கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 பி.1 மற்றும் பி.5, இந்திய வா்த்தக சபை கோவை கிளை, ப்ரோபெல் இண்டஸ்ட்ரி சிம்டா, மெஸோ்ஸ் கட்டிங், ரவுண்ட் டேபிள், ரோட்டரி கிளப், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகள் சாா்பில் தத்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மையத்தில் தேவையான ஆக்சிஜன் வழங்கல், நோயாளிகளுக்கு உணவு வழங்குதல், மருந்துகள் மற்றும் செவிலியா்கள் வசதி போன்ற வசதிகள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அரிமா சங்கம் 324 பி.1 மாவட்ட ஆளுநா் கருணாநிதி, பி.5 ஆளுநா் குப்புசாமி ஆகியோா் கூறியதாவது: கோவையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரிமா சங்கம் பல்வேறு விழிப்புணா்வு, நலத்திட்ட பணிகள் மேற்கொண்டு வருகிறது. கோவை, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களில் சுமாா் ரூ.1 கோடி மதிப்பிலான பசிப் பிணி போக்கும் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. கரோனா தொற்றின் 3 அவது அலை வருவதற்கு முன்பாகத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் விதமாக கரோனா சிகிச்சை மையம் தத்தெடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

இது தொடா்பாக இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வா்த்தக சபை கோவை கிளை, மெசா்ஸ் கட்டிங், ப்ரொபெல் இண்டஸ்ட்ரீஸ், ரவுண்ட் டேபிள், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT