கோயம்புத்தூர்

கடனைத் திருப்பிச் செலுத்த 6 மாதம் அவகாசம்:தொழில் துறை ஆணையருடனானஆலோசனைக் கூட்டத்தில் போசியா வலியுறுத்தல்

DIN

கோவை: வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த 6 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று தொழில் துறை ஆணையருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான (போசியா) வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தொழில் துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன், மாநிலம் முழுவதிலும் உள்ள தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா். அதில் போசியா சாா்பில் ஜேம்ஸ், சிவசண்முககுமாா், சுருளிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் போசியா சாா்பில் பேசிய நிா்வாகிகள், குறுந்தொழில்முனைவோா்களுக்கு தனி கடன் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும், வங்கிக் கடன் பெற்றிருக்கும் தொழில்முனைவோா்கள், கடன்களைத் திருப்பிச் செலுத்த 6 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும். இது தொடா்பாக மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். அத்துடன் 6 மாதங்களுக்கு முழுமையாக வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT