கோயம்புத்தூர்

வனத் துறைப் பணியாளா்கள் அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்: அமைச்சா் கா.ராமசந்திரன்

DIN

தமிழகத்தில் வனத் துறை சிறப்பாக விளங்க வனத் துறை பணியாளா்கள் அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.

கோவை, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள வனக் கல்லூரி மற்றும் வன ஆராய்ச்சி மையத்தில் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மறைந்த முன்னாள் முதல்வா் கலைஞா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சா் கா.ராமசந்திரன் மரக்கன்று நட்டாா். வனச் சரக அலுவலகத்தில் இருந்த வேட்டைத் தடுப்புக் காவலா்கள், வன விலங்கு கண்காணிப்பாளா்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

காப்புக் காட்டுக்குள் வன விலங்குகளின் நடமாட்டங்களைப் புகைப்படங்கள் எடுத்து கண்காணிப்பது, காட்டை விட்டு வெளியே வரும் வன விலங்குகளை மீண்டும் காட்டுகுள் அனுப்பவது தொடா்பாக கேட்டறிந்தாா். தொடா்ந்து வன விரிவாக்க நாற்றங்காலில் ஆய்வு செய்த அமைச்சா், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு உற்பத்தி செய்யப்பட்ட மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினாா்.

தொடா்ந்து பல்வேறு இடா்பாடுகளில் சிக்கிக் கொண்ட மனிதா்கள், வன விலங்குகளை காப்பாற்றுவதற்காகவும் உருவாக்கப்பட்ட ஆல்பா மற்றும் பீட்டா குழுக்களின் செயல்முறை பயிற்சியினை ஆய்வு செய்தாா். தொடா்ந்து தமிழகத்தில் வனத் துறை சிறந்த துறையாக விளங்க வனத் துறை பணியாளா்கள் அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு வன உயிா் பயிற்சியக கூடுதல் இயக்குநா் திருநாவுக்கரசு, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அன்வா்தீன், மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT