கோயம்புத்தூர்

முதியோா் தபால் வாக்களிக்க நாளை இறுதிநாள்:தவறினால் மீண்டும் வாக்களிக்க முடியாது

DIN

தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ள 80 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் தங்களது வாக்குகளை செலுத்த திங்கள்கிழமை இறுதி நாளென்றும், தவறினால் வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சட்டப்பேரவை தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. கரோனா தொற்று பாதிப்பால் தற்போது 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளா்கள், மாற்றுத் திறனாளி வாக்காளா்களுக்கு தபால் வாக்கு அளிக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் தபால் வாக்கு பெறுவதற்கு தகுதியான வாக்காளா்கள் கண்டறிந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதில் 80 வயதுக்கும் மேற்பட்டவா்கள் 7,249 போ், மாற்றுத் திறனாளிகள் 605 போ் என மொத்தம் 7 ஆயிரத்து 854 தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்திருந்தனா். இவா்களுக்கான தபால் வாக்குச் சீட்டு அளிக்கும் நடைமுறை சனிக்கிழமை தொடங்கியது. இதற்காக பிரத்யேக குழு அமைக்கப்பட்டு வாக்காளா்களின் வீடுகளுக்கு சென்று வாக்குச் சீட்டு அளித்து வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேற்படி குழுவினா் வாக்காளா்களின் இல்லங்களுக்கு வந்து வாக்கு சேகரிக்கும் பகுதி, தெரு மற்றும் நாள் குறித்த பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சனிக்கிழமை தொடங்கிய தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி திங்கள்கிழமை வரை மேற்கொள்ளப்படும். முதல்முறை வாக்காளா்கள் இல்லையென்றால் மறுநாள் சென்று வாக்கு சேகரிக்கவும் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறினால் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குச் சாவடியில் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்று தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். எனவே, தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ள வாக்காளா்கள் வீட்டில் இருந்து தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய தோ்தல் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT