கோயம்புத்தூர்

ஸ்டாலின் அழைத்ததால் திமுகவில் இணைந்தேன்: முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம்

DIN

சட்டப் பேரவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட இருந்த நிலையில் மு.க.ஸ்டாலின் அழைத்ததால் திமுகவில் இணைந்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் தெரிவித்தாா்.

வால்பாறை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எம்.ஆறுமுகத்தை ஆதரித்து கோவை தங்கம் ஞாயிற்றுக்கிழமை பேசியததாவது:

தமாகாவில் இருந்து விலகிய பின் வால்பாறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடத் தயாராக இருந்த சமயத்தில் திமுக தலைவா் ஸ்டாலின் என்னை அழைத்து பேசியதால் திமுகவில் இணைந்தேன். தோட்டத் தொழிலாளா்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ள நான், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் தோட்டத் தொழிலாளா்கள் பிரச்னைகளுக்கு எம்.எல்.ஏவுடன் இணைந்து பாடுபடுவேன் என்றாா்.

பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி, தெற்கு மாவட்டச் செயலாளா் தென்றல் செல்வராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT