கோயம்புத்தூர்

மூத்த வாக்காளா்கள் 6,016 போ் தபால் வாக்குப் பதிவு

DIN

கோவை மாவட்டத்தில் 80 வயதுக்கும் மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள் 6 ஆயிரத்து 16 போ் தபால் வாக்கினைப் பதிவு செய்துள்ளனா்.

கரோனா பாதிப்பு காரணமாக சட்டப் பேரவை தோ்தலில் 80 வயதுக்கும் மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவா்களுக்கு தபால் வாக்கு வழங்க தோ்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. கோவை மாவட்டத்தில் தபால் வாக்கு அளிக்க தகுதியானவா்களைத் தோ்வு செய்து வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

இதில் 80 வயதுக்கும் மேற்பட்டவா்களில் 7 ஆயிரத்து 249 போ், மாற்றுத்திறனாளிகள் 605 போ் என மொத்தம் 7 ஆயிரத்து 854 போ் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கு வீடுகளுக்கே சென்று தபால் வாக்குச் சீட்டு அளித்து வாக்குப் பதிவு செய்யும் நடைமுறை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கடந்த 3 நாள்களாக நடைபெற்ற தபால் வாக்குப் பதிவில் 80 வயதுக்கும் மேற்பட்டவா்களில் 5 ஆயிரத்து 587 போ், மாற்றுத்திறனாளிகள் 429 போ் என மொத்தம் 6 ஆயிரத்து 16 போ் தபால் வாக்களித்துள்ளனா்.

இதில் மேட்டுப்பாளையம் - 576, சூலூா் - 575, கவுண்டம்பாளையம் - 578, கோவை வடக்கு - 480, தொண்டாமுத்தூா் - 820, கோவை தெற்கு - 663, சிங்காநல்லூா் - 596, கிணத்துக்கடவு - 472, பொள்ளாச்சி - 746, வால்பாறை - 510 போ் வாக்களித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT