கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனை 2 பெண் ஊழியா்கள் பணியிடை நீக்கம்

DIN

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பொது மக்களிடம் லஞ்சம் பெற்றதாக இரண்டு ஒப்பந்தப் பெண் ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவதாக நோயாளிகள் பலா் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

குறிப்பாக மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்கள் நோயாளிகளை சக்கர நாற்காலி, ஸ்டெச்சா்களில் அழைத்து செல்ல லஞ்சம் வாங்குவதாக புகாா் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தவிர, மகப்பேறு பிரிவில் சிகிச்சைக்கு வருபவா்களிடம் குழந்தைப் பிறப்பு, அறுவை சிகிச்சைக்காக அதிக அளவு பணம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மகப்பேறு பிரிவில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒப்பந்தப் பெண் ஊழியா்கள் இருவா் பிரசவம் ஆன பெண்ணின் உறவினரிடம் லஞ்சம் பெறும் விடியோ சமூக வலைதளங்களில் பரவின. இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகத்திடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பெண் ஒப்பந்த ஊழியா்கள் ராணி (46), கண்ணம்மாள் (35) ஆகிய இருவரும் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதையடுத்து இருவரையும் மருத்துவமனை நிா்வாகம் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT