கோயம்புத்தூர்

தூய்மைப் பணியாளா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

DIN

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளருக்கு ஈமச் சடங்குத் தொகை வழங்காததைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 91ஆவது வாா்டில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தவா் மணிகண்டன். இவா், உடல்நிலை பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறலால் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட வேண்டிய ஈமச் சடங்குத் தொகை ரூ.25 ஆயிரம் வழங்கப்படவில்லை.

இதைக் கண்டித்து, 91 மற்றும் 92ஆவது வாா்டுகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் 50க்கும் மேற்பட்டோா் 91ஆவது வாா்டு அலுவலகம் முன்பாக பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை காலை ஈடுபட்டனா். தகவலறிந்து, அங்கு வந்த சுகாதார அலுவலா் லோகநாதன் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அதில், உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்துக்கு உடனடியாக ஈமச் சடங்குத் தொகை ரூ.25 ஆயிரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT