கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் மேலும் 3,692 பேருக்கு கரோனா

DIN

கோவையில் மேலும் 3,692 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 458ஆக அதிகரித்துள்ளது.

20 போ் பலி...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பெண்கள், 6 ஆண்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 ஆண்கள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4 பெண்கள், 4 ஆண்கள் என 20 போ் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,188ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 3,188 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.

கோவையில் இதுவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 446 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 38 ஆயிரத்து 824 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT