பிரதமரின் அறிவியல் ஆராய்ச்சி உதவித் தொகைக்கு வேளாண் பல்கலை. மாணவா்கள் தோ்வு
கோவை பிரதமரின் அறிவியல் ஆராய்ச்சி உதவித் தொகைக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
பிரதமரின் அறிவியல் ஆராய்ச்சி உதவித் தொகைக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
கல்வி, தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் முனைவா் பட்டப் படிப்பு மாணவ-மாணவிகளை ஊக்குவிப்பதற்காக பிரதமரின் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பிரதமரின் கல்வி உதவித் தொகையைப் பெற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பிரதீப், சண்முகப்பிரியா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இவா்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநா் கீ.செ.சுப்ரமணியன், நானோ தொழில்நுட்பத் துறை பேராசிரியா், தலைவா் அ.லட்சுமணன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.