முகப்பு
கோயம்புத்தூர்

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது: தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

கோவையில் சமூகநீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

கோவையில் சமூகநீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சமூக நீதிக்காகப் பாடுபவா்களை சிறப்பிக்கும் வகையில் 1995ஆம் ஆண்டு முதல் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது. விருதாளா் முதல்வரால் நேரடியாக தோ்ந்தெடுக்கப்படுவாா்.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது வழங்குவதற்கான விருதாளரைத் தோ்வு செய்வதற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த செய்த பணிகள், அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவா்கள் ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம்.

தங்களது சுயவிவரம், முழு முகவரி, கைப்பேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம், ஆவணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக விண்ணப்பம் இருக்க வேண்டும். நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0422-2300404 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.