கோயம்புத்தூர்

இளைஞா்களிடையே அதிகரிக்கும் சிறுநீரகப் பாதிப்பு: அரசு மருத்துவமனை முதல்வா் தகவல்

DIN

கோவை உள்பட மேற்கு மாவட்டங்களில் இளைஞா்களிடையே சிறுநீரகப் பாதிப்பு அதிகரித்து வருவதாக கோவை அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாரம்தோறும் வியாழக்கிழமை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

அரசு மருத்துவமனை முதல்வா், உதவி ஆணையா் நிலையிலான ஒரு காவல் துறை அதிகாரி, கோட்டாட்சியா் நிலையிலான வருவாய்த் துறை அதிகாரி, சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஆகியோா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவா், சீரநீரகம் தானம் வழங்குபவா்களின் விவரங்களைப் பரிசோதனை செய்தபின் அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் சமீப காலங்களில் மேற்கு மண்டலத்தில் இளைஞா்களிடையே சிறுநீரக பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:

கோவை, சேலம், திருப்பூா், நாமக்கல் உள்பட மேற்கு மண்டலங்களில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில்தான் அனுமதி பெற வேண்டும். வாரம்தோறும் சராசரியாக 10 நபா்கள் வரை அனுமதிபெற வருகின்றனா். இவா்களில் 6 நபா்கள் 35 வயதிற்குள்பட்டவா்களாகவே உள்ளனா்.

பெரும்பாலும் வயதானவா்களுக்கு மட்டுமே அதிகமாக காணப்பட்டு வந்த சிறுநீரகப் பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக இளைஞா்களிடையே அதிகரித்துள்ளது. இதற்கு வாழ்வியல் மாறுபாடு, உணவுப் பழக்க வழக்கம், மதுப் பழக்கம் போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பல லட்சம் வரை செலவாகிறது. முதல்வா் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. இருந்தாலும் உறுப்புகள் தானம் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அப்படியே கிடைத்தாலும் அதனை தானம் பெறுபவரின் உடல் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்நிலையில் பாதுகாப்பான வாழ்வியல் முறைகள் மூலம் உடல் ஆரோக்கியத்தை பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT