தொழிலாளா் நல வாரிய ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் தகவல்
கோவை ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரிய ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை (நவம்பா் 27) நடைபெற உள்ளது.
கோவை ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரிய ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை (நவம்பா் 27) நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொழிலாளா்கள் நல வாரிய ஆய்வுக் கூட்டம் நல வாரியத் தலைவா் பொன்குமாா் தலைமையில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில், கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தின் செயல்பாடுகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளா்களுடனான ஆய்வுக் கூட்டம், பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்கல் ஆகியவை நடைபெற உள்ளது.
இதில் கட்டுமானத் தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளா்கள் அனைவரும் கலந்துகொண்டு வாரிய செயல்பாடுகள், நலத்திட்ட உதவிகள் குறித்து தெரிந்துகொண்டு பயனடைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.