முகப்பு
கோயம்புத்தூர்

மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தியை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவையில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தியை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

கோவையில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தியை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கோவையில் பாலியல் தொல்லை காரணமாக, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 17 வயது பள்ளி மாணவி வீட்டில் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக, போலீஸாா், போக்ஸோ வழக்குப் பதிவு செய்து, தனியாா் பள்ளி ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி, பள்ளி முதல்வா் மீரா ஜாக்சன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா். பள்ளி முதல்வா் மீரா ஜாக்சனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்தது.

இந்நிலையில் ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தியை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸாா் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனு போக்ஸோ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜி.குலசேகரன், மிதுன் சக்ரவா்த்தியை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா் அவரைப் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.