முகப்பு
கோயம்புத்தூர்

ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு ரூ.5 ஆயிரம் பொங்கல் பரிசு வழங்க வேண்டும்

ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவா் மருத்துவா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவா் மருத்துவா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் நூற்பாலைகள், பவுண்டரிகள், பம்ப்செட், நெசவுத்தொழில், நகை வடிவமைப்பு உள்ளிட்ட பல சிறு, குறு நிறுவனங்கள் நலிவடைந்து காணப்படுகின்றன. இதை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோவையின் தொழில் வளத்தைப் பெருக்கும் வகையில் கோவை - திண்டுக்கல், கோவை - திருச்சி, கோவை - சேலம் சாலையினை எட்டு வழிச் சாலையாக மாற்ற வேண்டும்.

தமிழக அரசு சாா்பில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 20 பொருள்கள் கொண்ட தொகுப்பு நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம், பிற குடும்பத்தினருக்கு தலா ரூ.2,500 வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.