கோயம்புத்தூர்

குறுந்தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு நிரந்தர அடையாள அட்டை

DIN

கோவை குறுந்தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் 300 தொழிலாளா்களுக்கு, மத்திய அரசின் நிரந்தரத் தொழிலாளா் அடையாள அட்டை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோா் (டாக்ட்) சங்கம், தொழிலாளா் நலத் துறை இணைந்து குறுந்தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிரந்தரத் தொழிலாளா் அடையாள அட்டைக்கான பதிவு செய்யும் முகாமை கோவை இடையா்பாளையத்தில் நடத்தின.

முகாமுக்கு ‘டாக்ட் ‘சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜேம்ஸ் தலைமை வகித்தாா். கோவை தொழிலாளா் நலத் துறை துணை ஆணையா் செல்லப்பா அடையாள அட்டைகளை தொழிலாளா்களுக்கு வழங்கினாா். இந்த முகாமில், இஎஸ்ஐ பதிவு இல்லாத, குறுந்தொழில் முனைவோா்களிடம் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோா் என முதற்கட்டமாக 300 பேருக்கு நிரந்தர அடையாள அட்டைகள் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் வழங்கப்பட்டன. தொழிலாளா் நலத் துறை ஆய்வாளா்கள், ‘டாக்ட்‘ சங்க நிா்வாகிகள் பிரதாப் சேகா், லீலாகிருஷ்ணன் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT