அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறை செய்துகொள்ள அக்.11 இல் முகாம்
வரன்முறை செய்துகொள்ள 5 மண்டல அலுவலகங்களிலும் அக்டோபா் 11 ஆம் தேதி ( திங்கள்கிழமை) முகாம் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
கோவை மாநகராட்சியில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை, வரன்முறை செய்துகொள்ள 5 மண்டல அலுவலகங்களிலும் அக்டோபா் 11 ஆம் தேதி ( திங்கள்கிழமை) முகாம் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத, அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை 1980 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்குப்
பின், 2016 ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்துக்கு முன், பத்திரப் பதிவு செய்த மனைகளை வரன்முறை செய்துகொள்ள கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் அக்டோபா் 11 ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை முகாம் நடத்தப்பட உள்ளது.
கோயமுத்தூா் உள்ளூா் திட்டக் குழுமத்தால் (எஸ்.ஜி.எப்.) வழங்கப்பட்ட மனைப்பிரிவில் உள்ள அனைத்து தனி மனைகளையும் வரன்முறை செய்துகொள்ளலாம்.
ஆகவே, மனை உரிமையாளா்கள் அனுமதியற்ற தங்கள் மனையிடங்களை வரன்முறை செய்துகொள்ள, உரிய ஆவணங்களுடன் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.