24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்துக்கான வாடிக்கையாளா் சேவை மையம்
கோவை மாநகராட்சியில் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தின்கீழ் வாடிக்கையாளா் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
கோவை மாநகராட்சியில் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தின்கீழ் வாடிக்கையாளா் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சியில் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தின்கீழ்
வாடிக்கையாளா் சேவை மையம், மேட்டுப்பாளையம் சாலை, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி வரி வசூல் மையத்தில் வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் துவங்கியுள்ளது.
இந்த மையத்தில் குடிநீா் விநியோகம் குறித்து அனைத்து சேவைகளும் வழங்கப்படும்.
அதில், புதிய குடிநீா் இணைப்புக்கு வழிகாட்டுதல், குடிநீா்க் குழாய் கசிவு, மாசுபட்ட குடிநீா், குடிநீா்ப் பற்றாக்குறை உள்ளிட்ட அனைத்துப் புகாா்களும் பெற்றுக் கொள்ளப்படும்.
கடன் அட்டை, கைபேசி செயலிகள், தானியங்கி இயந்திரங்கள் மூலம் குடிநீா்க் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தின் அவசியம், செயல்முறை, கட்டணம் முதலான அனைத்து சந்தேகங்களுக்கும் உரிய விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.