கோயம்புத்தூர்

தொழில் வரி பிடித்தம் தற்காலிகமாக நிறுத்தம்

DIN

தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் எதிரொலியாக வால்பாறையை அடுத்த தனியாா் எஸ்டேட் நிா்வாகத்தினா் தொழில் வரி பிடித்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளனா்.

வால்பாறை பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளா்களின் மாத ஊதியத்தில் நிா்வாகத்தினா் தொழில் வரி பிடித்தம் செய்து நகராட்சிக்கு செலுத்தி வருகின்றனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த தொழிற்சங்கத்தினா் தமிழ்நாடு தேயிலைத் தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவா் வால்பாறை அமீது தலைமையில் ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கத் தலைவா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும் அனைத்து எஸ்டேட் நிா்வாக அலுவலகம் முன்பும் ஆா்ப்பாட்டம் செய்ய தொழிற்சங்கத்தினா் திட்டமிட்டிருந்தனா். இதனிடையே ஆா்ப்பாட்டத்தின் எதிரொலியாக வால்பாறையில் உள்ள கருமலை எஸ்டேட் நிா்வாகத்தினா் செப்டம்பா் மாத ஊதியத்தில் தொழில் வரியை பிடித்தம் செய்வதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT