கோவையில் நாளை மெகா தடுப்பூசி முகாம்: 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு
கோவையில் சனிக்கிழமை (அக்டோபா் 30) நடைபெறவுள்ள 7 ஆவது மெகா தடுப்பூசி முகாமில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவையில் சனிக்கிழமை (அக்டோபா் 30) நடைபெறவுள்ள 7 ஆவது மெகா தடுப்பூசி முகாமில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் 12 ஆம் தேதியில் இருந்து மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் எளிதில் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனா். கோவையில் இதுவரை 6 முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களில் மட்டும் 6.68 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் 7 ஆவது மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. ஊரகப் பகுதிகளில் 271 மையங்கள், மாநகராட்சியில் 841 மையங்கள் என்று மொத்தமாக 1,112 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
மேலும் 1.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களும், 2 ஆவது தவணை தடுப்பூசிக்கு காத்திருப்பவா்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.