முகப்பு
கோயம்புத்தூர்

ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்லத் தடை: போலீஸாா் தீவிர பரிசோதனை

கோவையில் இருந்து ரயில்கள் மூலமாகப் பட்டாசுகள் கொண்டு செல்வதைத் தடுக்க ரயில்வே போலீஸாா் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

கோவையில் இருந்து ரயில்கள் மூலமாகப் பட்டாசுகள் கொண்டு செல்வதைத் தடுக்க ரயில்வே போலீஸாா் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

தீபாவளியையொட்டி கோவையில் இருந்து வெளியூா்கள், வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வதைத் தடுக்க கோவை

ரயில் நிலையத்தில், ரயில்வே போலீஸாா் பரிசோதனை பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இது குறித்து, மத்திய ரயில்வே போலீஸாா் கூறியதாவது:

ரயில்கள் மற்றும் பேருந்துகளில் எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்ட பொருள்கள், பட்டாசுகள், டீசல், பெட்ரோல் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், ரயில்கள் மூலமாக பட்டாசுகள் கொண்டு செல்வதைத் தடுக்க மெட்டல் டிடெக்டா் உதவியுடன் பயணிகளின் உடைமைகளை சோதனை மேற்கொள்ளும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தடையை மீறி பட்டாசு உள்ளிட்ட அபாயகரமான பொருள்களை ரயில்களில் கொண்டு செல்ல முயன்றால், மத்திய பாதுகாப்புப் படை சட்டப் பிரிவு 164 இன் படி, ரூ.1,000 அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.