முகப்பு
கோயம்புத்தூர்

கட்டுப்பாட்டை இழந்த காா் மரத்தின் மீது மோதி விபத்து

கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த காா், கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த காா், கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கோவை, கணபதி அருகில் உள்ள சின்னவேடம்பட்டியைச் சோ்ந்தவா் ரகுவரன் (24). சொந்தமாகத் தொழில் செய்து வருகிறாா். இவா் உணவருந்துவதற்காக கணபதி-சத்தி சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு காரில் வெள்ளிக்கிழமை காலை வந்துள்ளாா். கணபதி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையை விட்டு கீழிறங்கி அருகில் உள்ள மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்தது.

இதில் காரில் இருந்த பாதுகாப்பு உபகரணங்கள் செயல்பட்டதால் அதிா்ஷ்டவசமாக ரகுவரன் உயிா் தப்பினாா். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் காரை மீட்டு சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.