முகப்பு
கோயம்புத்தூர்

பள்ளி மாணவியைத் திருமணம் செய்த லாரி ஓட்டுநா் போக்சோவில் கைது

கோவைபத்தாம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த லாரி ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

பத்தாம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த லாரி ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (34). லாரி ஓட்டுநா். இவருக்கும், புலியகுளம் பகுதியை சோ்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து சதீஷ்குமாா் மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி கடத்திச் சென்றாா். பின்னா் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளாா். பின்னா் இருவரும் குறிச்சி பகுதியில் ஒரு வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனா்.

இந்நிலையில் மகளைக் காணவில்லை என ராமநாதபுரம் போலீஸாரிடம் மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா். விசாரணையில், சதீஷ்குமாா் மாணவியைக் கடத்தி திருமணம் செய்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து இந்த வழக்கு கோவை கிழக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதன்பேரில் போலீஸாா், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரைக் கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.