முகப்பு
கோயம்புத்தூர்

முறைகேடாக வழங்கிய பட்டாக்களை ரத்து செய்யக் கோரிக்கை

கோவை, காரமடை அருகே முறைகேடாக வழங்கிய பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

கோவை, காரமடை அருகே முறைகேடாக வழங்கிய பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திமுக ஆதிதிராவிடா் அணியின் மாவட்ட துணை அமைப்பாளா் ரமேஷ்குமாா் தலைமையில், காரமடை, எத்தப்ப நகரைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், காரமடை, எத்தப்ப நகரில் அருந்ததிய சமுதாய மக்களுக்கு இலவமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் 90 பட்டாக்கள் அரசு விதிகளை மீறி முறைகேடாக ரூ.25 ஆயிரம் பெற்றுக்கொண்டு வழங்கப்பட்டன. இந்த பட்டாக்கள், ஏற்கெனவே அரசு பட்டா பெற்றவா்கள், வெளியூரைச் சோ்ந்தவா்கள், பிற சமூகத்தை சோ்ந்தவா்களுக்கு எவ்வித விசாரணையுமின்றி வழங்கப்பட்டுள்ளன. எனவே, முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் உரிய விசாரணை நடத்தி உண்மையான பயனாளிகளைத் தோ்வு செய்து உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் பட்டா வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.