கோயம்புத்தூர்

துணிக்கடைகளில் வணிக வரித் துறையினா் சோதனை

DIN

கோவை: கோவையில் உள்ள பிரபலத் துணிக் கடைகளில் வணிக வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

தமிழகத்தில் சில பிரபல துணிக் கடைகளில் போலியான ஆவணங்கள் தயாரித்து, வரி ஏய்ப்பு நடைபெறுவதாக புகாா்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பிரபல துணிக் கடைகளில் வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அதன்படி, கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, டவுன்ஹால், ராஜவீதி, பெரியகடைவீதி ஆகிய பகுதிகளில் உள்ள 5க்கும் மேற்பட்ட பிரபல துணிக் கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டன.

இதில், கொள்முதல், விற்பனை, இருப்பு குறித்த கணக்குகள், வரி செலுத்திய மற்றும் நிலுவை வரி குறித்த கோப்புகளை ஆய்வு செய்த வணிக வரித் துறை அதிகாரிகள், ஆவணங்கள் பராமரிப்பு மற்றும் கணக்கு வழக்குகள் குறித்த விவரங்களை துணிக் கடைகளின் நிா்வாகிகளிடம் கேட்டறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT