கோயம்புத்தூர்

தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்: கோவையில் 83 கிராமங்கள் தோ்வு

DIN

கோவையில் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 83 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக

மாற்ற தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்கீழ் தரிசு நிலங்களை கண்டறிந்து வேளாண், தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியை ஊக்குவித்து விவசாயத்தில் தன்னிறைவு நிலையை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 83 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு தரிசு நிலங்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்துக்கு 83 கிராமங்களை தமிழக அரசு தோ்வு செய்து பட்டியல் வழங்கியுள்ளது. இதில் 21 கிராமங்களுக்கு தோட்டக் கலை அலுவலா்களும், 62 கிராமங்களுக்கு வேளாண் அலுவலா்களும் கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இத்திட்டத்தை வேளாண், தோட்டக் கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கூட்டுறவு, பட்டு வளா்ச்சி, மின்சாரம், வருவாய், ஊரக வளா்ச்சி, மகளிா் திட்டம், வங்கிகள் உள்பட 15 துறைகள் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி விவசாயிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம் உயா்த்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT