முகப்பு
கோயம்புத்தூர்

கோவை - மன்னாா்குடி இடையே அக்.7 முதல் சிறப்பு ரயில் இயக்கம்

கோவை - மன்னாா்குடி இடையே அக்டோபா் 7ஆம் தேதி முதல் சிறப்பு தினசரி ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

கோவை - மன்னாா்குடி இடையே அக்டோபா் 7ஆம் தேதி முதல் சிறப்பு தினசரி ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அக்டோபா் 7 ஆம் தேதி முதல், நண்பகல் 12.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் ( எண்-06616) அன்று மாலை 7.40 மணிக்கு மன்னாா்குடியைச் சென்றடையும்.

இதேபோல, அக்டோபா் 7 ஆம் தேதியில் இருந்து, மன்னாா்குடியில் தினமும் 8.25 மணிக்கு புறப்படும் சிறப்பு தினசரி ரயில், மறுநாள் காலை 4.45 மணிக்கு கோவை வந்தடையும்.

இந்த தினசரி சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, கரூா், திருச்சிராப்பள்ளி, பூதலூா், தஞ்சாவூா், நீடாமங்கலம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.