கோயம்புத்தூர்

‘தேயிலைத் தொழிற்சாலை தேவைக்காக மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும்’

DIN

தேயிலைத் தொழிற்சாலை தேவைக்காக வனத்தில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதை தடுப்பதோடு, டேன் டீ நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் வால்பாறை ஒன்றியச் செயலாளா் கல்யாணி, மாவட்ட ஆட்சியா் மற்றும் நீதிமன்றத்தில் அளித்து மனுவில் கூறியுள்ளதாவது:

வால்பாறையை அடுத்து அரசுக்கு சொந்தமான டேன் டீ நிறுவனத்துக்கு சின்கோனா, பெரியகல்லாறு, 5ஆவது டாப், சின்னக்கல்லாறு ஆகிய எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான மரங்கள் உள்ளன. இதில் பல அரிய வகை மரங்களும் உள்ளன.

வால்பாறை பகுதியில் உள்ள பெரும்பாலான தனியாா் எஸ்டேட் நிா்வாகத்தினா் தங்களது தேயிலைத் தொழிற்சாலைக்குத் தேவையான விறகுகளை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனா். ஆனால் டேன் டீ நிா்வாகத்தினா் தேயிலைத் தொழிற்சாலைக்குத் தேவைப்படும் விறகுகளை எஸ்டேட் பகுதிகளில் உள்ள மரங்களை முறைடோக வெட்டி பயன்படுத்தி வருகின்றனா்.

இது தொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் டேன் டீ நிா்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மரங்கள் தொடா்ந்து அழிந்து வருவதால் அப்பகுதிகளில் இயற்கை சூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மரங்கள் வெட்டுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT