கோயம்புத்தூர்

போக்குவரத்து விதிமீறல்: வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் அறிவுரை

DIN

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் அறிவுரை வழங்கி அனுப்பினா்.

கோவை மாநகரில் சாலை விபத்துக்களைக் குறைக்க போக்குவரத்து போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக மாநகரின் முக்கிய சந்திப்புகளில் தலைக் கவசத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பிரசாரங்கள், குறு நாடகங்கள், துண்டு பிரசுர விநியோகம் உள்ளிட்டவற்றில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை சந்திப்பில் போக்குவரத்து போலீஸாா் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, தலைக் கவசம் அணியாமல், கைப்பேசியில் பேசியபடி விதிகளை மீறிச் சென்ற வாகன ஓட்டிகளைப் பிடித்து, சாலை விதிகளை மீறுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT