முகப்பு
கோயம்புத்தூர்

காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிா்வாகி கைது

காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிா்வாகியை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிா்வாகியை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கோவை, பீளமேடு ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (55). திமுக முன்னாள் நிா்வாகி.

உள்ளாட்சி தோ்தலின்போது அவா் கட்சிக்கு எதிராக வேலை செய்தாா் என்று கூறி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி என்பவரை முருகேசன் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த சுப்பிரமணி கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இச்சம்பவத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீஸாா் முருகேசனிடம் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், போலீஸாா் தன் மீது பொய் வழக்குப் போட்டுள்ளதாகக் கூறி வந்த முருகேசன், பீளமேடு காவல் நிலையத்தின் முன்பு தீக்குளிக்க உள்ளதாக கூறினாா்.

இதன்படி, வெள்ளிக்கிழமை காலை பீளமேடு காவல் நிலையம் முன்பு வந்த முருகேசன் தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். இதையடுத்து முருகேசனை கைது செய்த போலீஸாா் வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.