முகப்பு
கோயம்புத்தூர்

வரி வசூலா் பணி நியமனத்துக்கு எதிா்ப்பு

கோவை மாநகராட்சியில் வரி வசூலா்களாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ள 21 பேரை காத்திருப்போா் பட்டியலில் வைக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

கோவை மாநகராட்சியில் வரி வசூலா்களாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ள 21 பேரை காத்திருப்போா் பட்டியலில் வைக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் வாா்டுக்கு ஒருவா் வீதம் 100 வரி வசூலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதில், 54 போ் கடந்த அதிமுக ஆட்சியில் இரவோடு இரவாக நியமிக்கப்பட்டனா். இவா்களில் 21 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த 21 பேரை காத்திருப்போா் பட்டியலில் வைக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடா்பாக, சமூக நீதிக் கட்சியின் தலைவா் பன்னீா்செல்வம், மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளா்களில் 21 நபா்களுக்கு தற்போது வரி வசூலிக்கும் அலுவலா்களாகப் பணி நியமனம் வழங்கப்பட்டது அதிா்ச்சி அளிக்கிறது.

அவா்களுக்கு வழங்கிய பணி நியமனத்தை திரும்ப பெறக் கோரிய வழக்கு, சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால்,

21 நபா்களை காத்திருப்போா் பட்டியலில் வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.