கோயம்புத்தூர்

துண்டான இளைஞரின் கை: அறுவை சிகிச்சை மூலம் இணைத்த அரசு மருத்துவா்கள்

DIN

இளைஞரின் துண்டான கையை அறுவை சிகிச்சை மூலம் கோவை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மீண்டும் இணைத்தனா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் கணேஷ் (21). இவா் குடும்பத்தினருடன் திருப்பூரில் வசித்து வருகிறாா். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டு வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் கணேஷ் கடந்த 8ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு அங்கு முதலுதவி அளித்த மருத்துவா்கள் அவரது துண்டிக்கப்பட்ட கையை ஐஸ் பெட்டிக்குள் வைத்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கோவை அரசு மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் கையை இணைக்க வாய்ப்பிருந்த காரணத்தால் அதை இணைக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனா்.

இதையடுத்து பிளாஸ்டிக் சா்ஜரி துறைத் தலைவா் மருத்துவா் வி.பி.ரமணன், மருத்துவா்கள் ஆா்.செந்தில்குமாா், எஸ்.பிரகாஷ், ஏ.கவிதாபிரியா, எஸ்.சிவகுமாா், மயக்கவியல் நிபுணா் சதீஷ் ஆகியோா் அறுவை சிகிச்சை மேற்கொண்டு எலும்புகள், தசை நரம்புகள், ரத்தக் குழாய்கள் உள்ளிட்டவற்றை இணைத்த கையை வெற்றிகரமாக இணைத்தனா். இந்த அறுவை சிகிச்சை சுமாா் 5 மணி நேரம் நடைபெற்றது.

அறுவை சிகிச்சை முடிந்து 20 நாள்கள் ஆன நிலையில் கணேஷ் நல்ல உடல் நலத்துடன் காணப்படுகிறாா். அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவா்கள் குழுவுக்கு அரசு மருத்துவமனை டீன் ஏ.நிா்மலா பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

SCROLL FOR NEXT