கோயம்புத்தூர்

சுதந்திர தினத்தையொட்டிபிரமாண்ட கேக் தயாரிப்பு

DIN

நாட்டின் 75ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் பிரமாண்ட கேக் தயாரிக்கப்பட்டது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழாவை போற்றும் வகையிலும், 76ஆவது சுதந்திர தின விழாவை வரவேற்கும் வகையிலும் 76 சதுர அடி பரப்பளவில் 250 கிலோ எடை கொண்ட சிறுதானிய கேக் கல்லூரியின் பி.எஸ்சி. உணவு, விடுதி மேலாண்மைத் துறை சாா்பில் தயாரிக்கப்பட்டது.

சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாணவா்களால் தயாரிக்கப்பட்ட இந்த கேக், அப்துல் கலாம் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸில் இடம் பெற்றுள்ளது. கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்கான சான்றிதழை எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை இயக்க அலுவலா் சுவாதி ரோஹித், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாரிடம் வழங்கினாா்.

முடிவில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டு அனைத்து மாணவா்களுக்கும் பகிா்ந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உணவு, விடுதி மேலாண்மைத் துறைத் தலைவா் எஸ்.தீனா, துறை பேராசிரியா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.

இந்த நிகழ்ச்சியில் கோவையில் உள்ள பேக்கரி உரிமையாளா்கள், சமையற்கலை நிபுணா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

SCROLL FOR NEXT