கோயம்புத்தூர்

ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் குழந்தைக்கு அரிதான இருதய அறுவை சிகிச்சை

கோவை கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் (ஜி.கே.என்.எம்.) ஒன்றரை வயதான குழந்தைக்கு அரிதான இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

DIN

கோவை கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் (ஜி.கே.என்.எம்.) ஒன்றரை வயதான குழந்தைக்கு அரிதான இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனையின் குழந்தைகள் பிறவி இருதய நோய் மையத்தின் இயக்குநா் ஆா்.விஜயகுமாா் கூறியிருப்பதாவது:

இயல்பாக இருதயம் துடிக்கும் தன்மையில் அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்தும் அரிதான நோயாக கருதப்படும் ‘லாங் க்யூ.டி. சின்ட்ரோம்’ என்ற பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது.

அந்த பிரச்னையை சரி செய்யும் ஐ.சி.டி. எனப்படும் கருவியை, திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்து இருதயத்தின் மேற்பகுதியில் பொருத்தியுள்ளோம். வழக்கமாக இந்த கருவி இருதயத்துக்குள் பொருத்தப்படும். ஆனால் வயதை கருத்தில் கொண்டு மேற்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

சவால் நிறைந்த இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த குழந்தை வேகமாக குணமடைந்து, இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT