ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1.30 லட்சம் பறிமுதல்
கோவையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.1.30 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
கோவையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.1.30 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 59 ஆவது வாா்டுக்குள்பட்ட சிங்காநல்லூா் - வெள்ளலூா் சாலையில் அரவான் கோயில் அருகில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் அந்த வாகனத்தில் வந்தவா், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.30 லட்சம் ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.