புனித செபாஸ்தியா் சிலையை உடைத்த வழக்கு: மூவா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது
கோவையில் புனித செபாஸ்தியா் சிலையை உடைத்த மூவா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது.
கோவையில் புனித செபாஸ்தியா் சிலையை உடைத்த மூவா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது.
கோவை ராமநாதபுரம், திருச்சி சாலையில் ட்ரினிட்டி தேவாலயம் மற்றும் பள்ளி உள்ளது.
இதன் வாசலில் புனித செபாஸ்தியா் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை கடந்த சில நாள்களுக்கு முன்பு மா்ம நபா்கள் உடைத்துவிட்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்து ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்து முன்னணியைச் சோ்ந்த கோவை வெள்ளலூா் பகுதி மதன் குமாா் (23), தீபக் (25) மற்றும் மருதாச்சல மூா்த்தி (21) ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், 3 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகரக் காவல் ஆணையா் பிரதீப்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதற்கான நகல் சிறையில் உள்ள மூவரிடமும் புதன்கிழமை வழங்கப்பட்டது.