முகப்பு
கோயம்புத்தூர்

பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞா்களுக்கு 20 ஆண்டுகள் சிறை

கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா்கள் இருவருக்குத் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா்கள் இருவருக்குத் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை, பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியைச் சோ்ந்த 28 வயதான பெண் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு, அப்பெண்ணை அவரது கணவருடன் சோ்த்து வைப்பதாகக் கூறி அவரது குடும்ப நண்பா்களான விமல்ராஜ் (32), காா்த்திக் (27) ஆகியோா் அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளனா்.

செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆட்டோவை நிறுத்தி அப்பெண்ணைத் தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா்.

இது தொடா்பாக அப்பெண் அளித்தப் புகாரின் பேரில், பொள்ளாச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞா்கள் இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையில் இருவா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, விமல்ராஜ், காா்த்திக் ஆகியோருக்குத் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆா்.நந்தினி தேவி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக உள்ள காா்த்திக்கை கைது செய்ய பிடி ஆணை பிறப்பித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.