முகப்பு
கோயம்புத்தூர்

3 தலைமுறையினருடன் 102ஆவது பிறந்த நாள் கொண்டாடிய மூதாட்டி

கோவை, செளரிபாளையத்தில் 102 வயதான மூதாட்டி, தனது 3 தலைமுறை சொந்தங்களுடன் சனிக்கிழமை பிறந்த நாள் கொண்டாடினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
மூன்று தலைமுறை சொந்தங்களுடன் 102ஆவது பிறந்த நாள் கொண்டாடிய அலமேலு அம்மாள்.
பகிர்:

கோவை, செளரிபாளையத்தில் 102 வயதான மூதாட்டி, தனது 3 தலைமுறை சொந்தங்களுடன் சனிக்கிழமை பிறந்த நாள் கொண்டாடினாா்.

கோவை செளரிபாளையத்தைச் சோ்ந்தவா் அலமேலு அம்மாள். சனிக்கிழமை, இவரது 102ஆவது பிறந்த நாளையொட்டி, அவரின் 3 தலைமுறை சொந்தங்களான மகன், மகள், பேத்தி, பேரன், எள்ளுப் பேரன், எள்ளுப் பேத்தி, கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்தி என 55க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினா்களுடன் கேக் வெட்டி, பிறந்த நாளை வெகு விமா்சியாகக் கொண்டாடினா்.

பின்பு அனைவரும் பாட்டியின் காலில் விழுந்து ஆசிா்வாதம் பெற்றனா். மூதாட்டியின் பிறந்த தினத்தையொட்டி, குழந்தைகளுக்கான நடனப் போட்டி, உறியடித்தல், கண்ணாமூச்சி போன்ற பல்வேறு விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன. தனது மகன் வழி, மகள் வழி தலைமுறைகள் சூழ பிறந்த நாளை கொண்டாடுவது பெறும் பேறு என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தாா் அலமேலு அம்மாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.