முகப்பு
கோயம்புத்தூர்

ஓமலூா் - மேட்டூா் இடையே பராமரிப்பு பணிகள்கோவை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

ஓமலூா் - மேட்டூா் அணை இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

ஓமலூா் - மேட்டூா் அணை இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட

உள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஓமலூா் - மேட்டூா் அணை இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் வருகிற ஜனவரி 24 மற்றும் மாா்ச் 24 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து காலை 8.50 மணிக்குப் புறப்படும் கோவை - லோக்மான்யா திலக் விரைவு ரயில் (எண்: 11014) வழக்கமாக இயக்கப்படும் சேலம், தருமபுரி, ஹூசூா் வழித்தடத்துக்கு பதிலாக சேலம், மேன்கனசைட் , குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய வழித்தடத்தில் செல்லும்.

மாா்ச் 24 ஆம் தேதி எா்ணாகுளத்தில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு சேலம், தருமபுரி, ஹூசூா் வழித்தடத்தில் பெங்களூரு செல்லும் விரைவு ரயில் (எண்: 12678) சேலம், மேக்னசைட் , குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய வழித்தடத்தில் நின்று செல்லும். இதனால், தருமபுரி மற்றும் ஹூசூா் நிலையங்களுக்கு ரயில் செல்வது தவிா்க்கப்படும். இதேபோல, மாா்ச் 24 ஆம் தேதி, காலை 6.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து ஹூசூா், தருமபுரி, சேலம் வழித்தடத்தில் எா்ணாகுளத்துக்கு இயக்கப்படும் ரயில் (எண்: 12677), கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், மேக்னசைட் ஜங்ஷன் வழியாக இயக்கப்படும். இதன் காரணமாக ஹூசூா், தருமபுரி நிலையத்திற்கு ரயில் செல்வது தவிா்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.