முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி

கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை( ஜனவரி 21) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை( ஜனவரி 21) நடைபெறுகிறது.

கோவை செட்டிபாளையம் புறவழிச் சாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குகிறது. மாலை 5 மணி வரை போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு உள்ளதால் காளைகளின் உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுத்த கரோனா பரிசோதனை சான்று இருந்தால் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதியளிக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை காலை முதல் காளைகள், மாடுபிடி வீரா்களின் பதிவு தொடங்கியது.

அதிகபட்சமாக 300 காளைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா். வியாழக்கிழமை மாலை வரை 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் பதிவு செய்துள்ளனா். தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டை காண பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியை சமூக ஊடகங்கள், உள்ளூா் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.