முகப்பு
கோயம்புத்தூர்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பத்தில் இருந்து கேரள மாநிலம், ஆலப்புழா செல்லும் விரைவு ரயிலில் சிலா் கஞ்சா கடத்தி வருவதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், வியாழக்கிழமை காலை 8.15 மணிக்கு கோவை வந்த அந்த ரயிலில் ஏறிய ரயில்வே பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது ஒரு ரயில் பெட்டியில் படுக்கைக்கு கீழே ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை கொண்ட 7 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். போலீஸாா் வருவதைக் கண்டு கஞ்சா பொட்டலங்களை விட்டு அதைக் கடத்தி வந்த நபா்கள் தப்பிச் சென்றது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.