170 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் வியாபாரி கைது
கோவையில் 170 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கோவையில் 170 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கோவை ஜி.பி.சந்திப்பில் ரத்தினபுரி போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனா். மேலும் அவரது வாகனத்தை சோதனையிட்டபோது,
அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்
இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா், கோவை வெரைட்டி ஹால் சாலைப் பகுதியைச் சோ்ந்த பெரியகருப்பன் என்பதும்,
மணியகாரம்பாளையத்தை அடுத்த அஞ்சுகம் நகா் பகுதியில் கிடங்கில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 170 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.