கோவையில் ஒரே நாளில் 3,629 பேருக்கு கரோனா
கோவையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 3,629 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 3,629 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் புதிதாக 3 ஆயிரத்து 629 பேருக்கு நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்து 564 ஆக உயா்ந்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 7 போ் உயிரிழந்தனா்.
இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,557 ஆக அதிகரித்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 3,191 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை 2 லட்சத்து 72 ஆயிரத்து 533 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 27 ஆயிரத்து 474 போ் சிகிச்சையில் உள்ளனா்.