முகப்பு
கோயம்புத்தூர்

முகவரி கேட்பதுபோல நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகை பறிப்பு

முகவரி கேட்பதுபோல நடித்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகை பறித்துச் சென்ற நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

முகவரி கேட்பதுபோல நடித்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகை பறித்துச் சென்ற நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை மாவட்டம், அன்னூா் அருகேயுள்ள குன்னத்தூா் மாகாளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் லட்சுமி (74). இவா் புதன்கிழமை மாலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் முகவரி கேட்பதுபோல நடித்து லட்சுமியின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளாா்.

இச்சம்பவம் தொடா்பாக அன்னூா் காவல் நிலையத்தில் லட்சுமி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.