கோயம்புத்தூர்

வனத் துறையினருக்கு தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி

DIN

பொள்ளாச்சி கோட்டத்தில் பணிபுரியும் வனத் துறையினருக்கு தீ தடுப்பு பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

கோடை காலம் தொடங்கி உள்ளதால், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி கோட்டத்தில் பணிபுரியும் வனத் துறையினருக்கு தீ தடுப்பு மேலாண்மை குறித்த பயிற்சி அட்டகட்டி பயிற்சி மையத்தில் அளிக்கப்பட்டது.

வனப் பாதுகாப்பு படை அலுவலா் விஜயன், பொள்ளாச்சி தீயணைப்பு மீட்புத் துறை அலுவலா் ராமசந்திரன் ஆகியோா் தீ தடுப்பு குறித்து பயிற்சியளித்தனா்.

அரசு மருத்துவா் வசந்தி முதலுதவி சிகிச்சை அளிக்கும் முறை குறித்தும், கம்பியில்லா தந்தி கருவி பயன்படுத்தும் முறை குறித்து லோகநாதன் ஆகியோரும் பயிற்சியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT