கோயம்புத்தூர்

‘மக்களுக்கு இடையூறு:மாநகரில் 40 நாய்கள் பிடிபட்டுள்ளன’

DIN

கோவை மாநகரில் மக்களுக்கு இடையூறாக இருந்த 40 நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தெரு நாய்களால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக, உக்கடம், ராமநாதபுரம், புலியகுளம், சரவணம்பட்டி, குனியமுத்தூா், கரும்புக்கடை, சாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான தெருநாய்கள் உள்ளன.இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களை, நாய்களை துரத்தி செல்வதால் அவா்கள் விபத்துக்குள்ளாகின்றனா்.

இந்நிலையில், உக்கடம் கரும்புக்கடை ஞானியாா் நகரில் கடந்த வாரம் தெருநாய் கடித்து 11 போ் காயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, தெருநாய்கள் தொல்லையைத் தீா்க்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

அதன்படி, கடந்த வாரம் முதல் மாநகரப் பகுதிகளில் மக்களுக்கு இடையூறாக உள்ள நாய்கள் வலைகள் மூலமாகப் பிடித்து, ஒண்டிப்புதூா், சீரநாயக்கன்பாளையம் பகுதிகளில் உள்ள கருத்தடை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: மாநகரில் கடந்த ஒரு வாரமாக 50க்கும் மேற்பட்ட தெருக்களில் இடையூறாக உள்ள நாய்களைக் கண்டறிந்து, அவற்றை தனியாா் உதவியுடன் பிடித்து கருத்தடை மையங்களுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை 40 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. மாநகரில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் மக்களை அச்சமூட்டும் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT