முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை நகராட்சி புதிய ஆணையராக கே.பாலு பொறுப்பேற்பு

வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக கே. பாலு புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக கே. பாலு புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

வால்பாறை நகராட்சி ஆணையராக பதவி வகித்து வந்த சுரேஷ்குமாா், திருச்சி மாவட்டம் துறையூா் நகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையராக இருந்த கே. பாலு, வால்பாறை நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், வால்பாறை நகராட்சி ஆணையராக கே.பாலு புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு நகராட்சிப் பொறியாளா் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி தலைமையில் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.